
புதுச்சேரி மாவட்டம் ராக் கடற்கரைப் பகுதியில் கடல் அலை நீல நிறத்தில் ஜொலித்து காணப்படுகிறது. இதனை அங்கு வரும் பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மிகவும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறார்கள். பலரும் கடலில் நீல நிறத்தில் அலைகள் உருவாவதை கண்டு வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர். கடல் அலை நீல நிறமாக வந்து செல்வது குறித்து கடல் வாழ் உயிரின உயர் அதிகாரி பேராசிரியர் ஒருவர் இது குறித்து கூறியதாவது, கடலில் பலவகையான உயிரினங்கள் மற்றும் நுண்ணுயிரிகள் வாழ்கின்றன.
இதில் கடலுக்கு அடியில் நம் கண்களுக்குத் தெரியாத பல வகையான அரிய நுண்ணுயிரிகள் பாக்டீரியாக்கள் உயிர் வாழ்கிறது. அதுபோல கடலில் வாழும் ஒரு உயிரினம் “டைனோ ப்ளாச்சுலேட்”ஆகும்.”நாட்டிலுக்காசின்டிலன்ஸ்”என்ற மிதவை நுண்ணுயிரி குடும்ப வகையைச் சார்ந்தது. இதனை தமிழில் “கடல் பொறி” என அழைப்பர். இதனை ஆங்கிலத்தில் “சி பார்க்கல்ஸ்” என அழைப்பர்.
இந்த உயிரினம் தனக்குத் தேவையான உணவு சரியான விகிதத்தில் கிடைக்கும் பொழுது பகலில் சூரிய வெளிச்சத்தில் சக்தியைப் பெற்று இரவில் ஜொலி ஜொலிக்கிறது. இந்த உயிரினத்தின் உடலில் உள்ள லூசி பெரின், லூசிபரஸ் என்ற வேதிப்பொருள் ஆக்சிஜனோடு இணைந்து ஒளியை ஏற்படுகிறது. இதனால் கடல் நீல நிறத்தில் ஒளி வீசுகிறது. இந்தக் காட்சியை “பயாலுமின் சென்ஸ்”என அழைப்பர்.