மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நேற்று உலக ஆடியோ விஷுவல் பொழுதுபோக்கு மாநாடு நடைபெற்றது . இந்த மாநாட்டு நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இதில் தொழில்துறை தலைவர்கள்,அரசியல் அதிகாரிகள் மற்றும் மோகன்லால், சிரஞ்சீவி, ஹேமமாலினி, ரஜினிகாந்த், மிதுன் சக்கரவர்த்தி, அக்ஷய் குமார் போன்ற பல நடிகர்களும் கலந்து கொண்டனர்.

இந்த மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நரேந்திர மோடி குறித்து பேசி உள்ளார். அவர் கூறியதாவது பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி சரியான முடிவை கொண்டு வருவார் என்றும், மிகப்பெரிய சவாலையும் எளிதாக கையாளும் மிகச் சிறந்த நபர் என்றும் கூறினார். அதோடு பயங்கரவாதிகளின் தாக்குதலை தைரியமாக கையாண்டு ஜம்மு காஷ்மீரில் அமைதியை ஏற்படுத்துவார் என அவர் கூறினார்.

இந்த மாநாட்டு நிகழ்ச்சி சில காரணங்களால் ஒத்திவைக்கப்படும் என்று பலர் கூறி வந்த நிலையில் பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சியை கட்டாயமாக நடத்துவார் என்று எனது நம்பிக்கை உண்மையானது எனவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.