
மும்பையில் பிறந்த ரத்தன் டாடா, டாடா குழுமம் மற்றும் டாடா சன்ஸ் தலைவராக 12 ஆண்டு காலம் பணியாற்றினார். இவர் ஓர் இந்திய தொழிலதிபராவார். இவர் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி 2024 நாளில் வயது முதுமை காரணமாக இறந்தார். இவரது உடல் மக்களின் அஞ்சலிக்காக மும்பையில் வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரது இறுதி சடங்குகள் அனைத்தும் வொர்லி மயானத்தில் நடைபெற்றது. தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உடலுக்கு பல்வேறு துறை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள், அரசியல் பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர்கள் மறைந்த ரத்தன் டாடாவின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அரசின் முழு மரியாதையுடன் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் தொழிலதிபர் ரத்தன் டாடாவின் நினைவாக மகாராஷ்டிரா மாநிலம் ஸ்கில்ஸ் டெவெலப்மென்ட் யுனிவர்சிட்டிக்கு அவரது பெயரையே வைத்து பெருமைப்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக் நாத் ஷிண்டே இது குறித்து கூறியதாவது, இனிமேல் மகாராஷ்டிரா மாநிலம் ஸ்கில்ஸ் டெவலப்மெண்ட் யுனிவர்சிட்டி, ரத்தன் டாடா மகாராஷ்டிரா மாநில ஹில்ஸ் டெவலப்மென்ட் யுனிவர்சிட்டி என மாற்றம் செய்யப்பட்டுள்ளது இவ்வாறு அறிவித்தார். இச்சம்பவம் ரத்தம் டாடாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக அமைந்தது.