ஜம்மு மட்டும் காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் ரஜிம் அக்தர்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவர் உடல்நலம் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கர்ப்பிணியான அக்தர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் தொடர்பான 5 டாக்டர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அதோடு துணை மருத்துவர்கள் உள்ளிட்ட பிற பணியாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளது. இந்த 5 டாக்டர்களும் அவசர வார்டில் இரவு பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தப் பெண் உயிரிழப்பதற்கு முன் கடந்த வாரம் மர்ம பாதிப்பால் அவரது 3 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். இந்த சோகத்தில் இருந்து வெளியே வருவதற்குள் இந்த பெண்ணும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.