செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை சேகர் பாபு,  தெய்வ பக்தி இல்லாத யாரையும் அறங்காவலராக  நியமிக்க கூடாது என்ற நீதிமன்றங்களின் தீர்ப்புகளை மதிக்கின்ற…..உடனடியாக நிறைவேற்றுகின்ற ஆட்சி இந்த ஆட்சி. உதாரணத்திற்கு திருக்கோயில்களில் செல்போன்களைப் பயன்படுத்தக்கூடாது என்பது உத்தரவுக்கிணங்க திருச்செந்தூரிலும், பழனியிலும், செல்போன்களை பயன்படுத்துவதற்கு  தடை விடுதிக்கப்பட்டுள்ளது.

அறங்காவலரை  நியமிப்பது முதல்….. இந்து சமய அறநிலைத்துறையில்  புதிதாக  பணியாளரை நியமிக்கின்ற வர…..  அதேபோல் தமிழ்நாடு தேர்வாணையத்தின் மூலம் நியமிக்கின்ற பதவிகள் வரை இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகள் வரை அனைவரும் இந்துக்கள்தான் இந்துக்கள் அல்லாத ஒருவரைக் கூட எந்த பதவியிலும் நியமிப்பதில்லை. அறங்காவலர் குழு பதவியிலும் ஹிந்துக்கள் இல்லாத ஒருவரையும் எங்கும் நியமிப்பதில்லை…

உங்கள் கூற்றுப்படி பார்த்தால் கோயில்களில் அரசியல் மனமாச்சியங்களுக்கு அப்பாற்பட்டு….. மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோயிலில் எடுத்துக்கொண்டால்,  அந்த அறங்காவலர் குழு ஒரு தலைவர் யார் என்றால் ? நம்முடைய அப்பல்லோ மருத்துவமனையின் உரிமையாளர் விஜய்குமார் ரெட்டி…

அதேபோல நம்ம அழகர் கோயிலை எடுத்துக் கொண்டால்?  அங்கே அறங்காவலர் குழு தலைவர் யார் என்றால்?  நம்முடைய ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியினுடைய உரிமையாளர் அன்புக்குரிய வெங்கடாசலம். இப்படி அரசியல் மனமாச்சியங்களுக்கு அப்பாற்பட்டு யாரால்  திருக்கோவிலுக்கு நன்மை கிடைக்குமோ,  அவர்களை தான் இந்த ஆட்சி அறங்காவலராகவும், அறங்காவல குழு தலைவராக நியமித்துக் கொண்டு இருக்கின்றது.

அந்தவகையில் இந்துக்கள் அல்லாத யாரையும் இந்தத் துறையில் அறங்காவலர்களாகவோ,  நியமன பதவிகளிலோ நியமிக்கப்படவில்லை என்று உறுதியாக தெரிவிக்கிறேன். அப்படி ஏதாவது தவறு நடந்து இருந்தால், அதை சுட்டிக் காட்டினால் உடனடியாக நடவடிக்கை எடுக்க ஹிந்து சமய அறநிலையத்துறை தயாராக இருக்கின்றது.