இந்தியாவில் மக்கள் பலரும் வங்கி கணக்குகளை விட அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் இணைய அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அஞ்சலகத்தில் நேர வாய்ப்பு திட்டமானது வங்கிகளில் செயல்பட்டு வரும் நிலையான வைப்புத் தொகை திட்டம் போல உள்ளது. இதில் அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை முதலீடு செய்ய முடியும். ஒவ்வொரு காலண்டிற்கும் ஒரு முறை வட்டி கணக்கிடப்படும். அதாவது ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 6.9% வட்டி விகிதத்தில் உங்களுக்கு ஒரே வருடத்தில் வட்டி 7081 கிடைக்கும்.

அடுத்து இரண்டு வருட கால வைப்புத் தொகையில் வட்டி விகிதம் ஏழு சதவீதமாக கணக்கிடப்பட்டு 14,888 ஆக வரவு வைக்கப்படும். இவ்வாறு வருடத்திற்கு வருடம் வட்டி தொகை அதிகரித்துக் கொண்டே செல்லும். இதில் அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகால வைப்புத் தொகையில் ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டுக்கு 7.5% வட்டி விகிதத்தில் மொத்தமாக 1,44,995 ரூபாய் திரும்ப பெறலாம். வங்கிகளை ஒப்பிடும்போது அஞ்சல் நிலையத்தின் வட்டி விகிதம் அதிகமாகும்.