
பிரபல நடிகரும் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகருமான சாயாஜி ஷிண்டே, மகாராஷ்டிராவின் துணை முதல்வர் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (NCP) கட்சியில் இணையப்பெற்றுள்ளார். அரசியல் பணிகளிலும் ஈடுபட விரும்பும் சாயாஜி, அரசியல் பயணத்தை NCP மூலம் தொடங்கியுள்ளார்.
தமிழில் ‘பாரதி’ படத்தில் அறிமுகமான இவர், தூள், அழகி, ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற திரைப்படங்களில் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களிலும் முக்கிய பங்களிப்பை அளித்துள்ளார். NCPயில் இணைந்தது அவருக்கு அரசியல் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளதாக பார்க்கப்படுகிறது.