சென்னை மாவட்டத்தில் உள்ள வடகரை பாபா நகரில் சதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கடந்த ஒரு மாதமாக வேலைக்கு செல்லாமல் சதீஷ்குமார் வீட்டில் இருந்துள்ளார். நேற்று இரவு மதுவில் விஷம் கலந்து குடித்து சதீஷ் தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சதீஷின் உடலை மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் சதீஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.