கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோதிகுட்லப்பள்ளி பகுதியில் மேகலா என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் விவசாயியான மோகனிடம் 72 சென்ட் நிலத்தை 9 லட்சம் ரூபாய்க்கு கடந்த ஆண்டு வாங்கினார். இந்நிலையில் மோகன் கடந்த 28-ஆம் தேதி தான் ஒரு வருடத்திற்கு முன்பே விற்ற நிலத்திற்கு மேலும் 50 ஆயிரம் ரூபாய் வேண்டும் என கேட்டு மேகலாவுடன் தகராறு செய்துள்ளார்.

இதனையடுத்து பணம் தர மறுத்த மேகலாவை மோகன் உருட்டு கட்டையால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த மேகலா கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மோகனை கைது செய்தனர்.