நீலகிரி மாவட்டத்தில் உள்ள கரியசோலை கிராமத்தில் பொது குடிநீர் கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றில் தண்ணீர் சுகாதாரமற்ற முறையில் இருந்ததால் நெலாக்கோட்டை ஊராட்சியினர் கிணற்றை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தூர்வாரும்போது எலும்புக்கூடுகள் கிடந்ததால் ஊராட்சி நிர்வாகத்தினரும், பொதுமக்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த நெலாக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று எலும்புகளை பார்வையிட்டனர். மேலும் தடவியல் நிபுணர்கள் எலும்புகளை ஆய்வு செய்தபோது அது மனித எலும்புகள் இல்லை என்பது தெரியவந்தது. அதன் பிறகு பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். எனவே மீட்கப்பட்டது வனவிலங்குகளின் எலும்பா? என்பதை கண்டறிய சென்னை வண்டலூர் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.