கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ரத்தினபுரி கண்ணப்பன் நகரில் நிதி நிறுவன அதிபரான விசு(22) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோவைபுதூரைச் சேர்ந்த கார் டிரைவர்கள் பால தண்டாயுதபாணி, அவரது மகன் விவேக் ஆகியோர் ஆர்.எஸ்.புரம் டிபி ரோட்டில் இருக்கும் வங்கியில் அடமானம் வைத்துள்ள தங்க நகையை மீட்க பணம் வேண்டும் என கேட்டுள்ளனர். இதனையடுத்து விசு அவர்களுடன் வங்கிக்கு சென்று 68 ஆயிரம் ரூபாய் கொடுத்து தங்க நகையை மீட்டு கொடுத்தார்.

இதனையடுத்து அவர்கள் விசுவிடம் தங்க நகையை கொடுத்துவிட்டு 58 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கி சென்றுள்ளனர். இதனை தொடர்ந்து அவர்கள் கொடுத்த தங்கநகையை விசு வங்கியில் அடகு வைக்க சென்றபோது அது தங்க முலாம் பூசப்பட்ட செம்பு நகை என்பது தெரியவந்தது. அவர்கள் நகையை வாங்கிக் கொண்டு அதற்கு பதிலாக போலி நகைகளை கொடுத்து மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து ஆர்.எஸ். புரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் பால தண்டபாணி, விவேக் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.