கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளப்புறம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கனிம வளங்கள் ஏற்றி வந்த டாரஸ் லாரியை போலீசார் நிறுத்துமாறு சைகை காட்டியுள்ளனர். ஆனால் லாரி டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் ஓட்டி சென்றுள்ளார். இதனால் போலீஸ் ஏட்டு சஜிகுமார் தனது வாகனத்தில் லாரியை துரத்தி சென்று செங்கவிளை நாற்கரை சாலை தொடக்கத்தில் வைத்து மடக்கி பிடித்தார். இதனையடுத்து போலீசார் சோதனை நடத்தியதில் அதிக அளவு கனிம வளங்களை ஏற்றி சென்றது தெரியவந்தது. இதனால் லாரிக்கு போலீசார் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.