தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் பிரசாத் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வெங்கடேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் வெங்கடேஸ்வரி தர்மபுரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் எனது கணவர் பிரசாத்குமாரும், அவரது பெற்றோரும் இணைந்து என்னை அடித்து துன்புறுத்தி வீட்டை விட்டு துரத்திவிட்டனர்.

மேலும் எனக்கு தெரியாமல் பிரசாத்குமார் வேறு ஒரு பெண்ணை 2-வதாக திருமணம் செய்துள்ளார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் பிரசாத்குமார் மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.