
மத்திய மாநில அரசுகள் விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் மூலமாக ஏழை விவசாய குடும்பங்களுக்கு நான்கு மாதத்திற்கு ஒரு முறை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளில் ஒரு வருடத்திற்கு மட்டுமே 6000 ரூபாய் வரை உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பயன்பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் 17வது தவணை பணமானது ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் மத்திய அரசால் வழங்கப்படும் என்று தகவல்கள் கூறப்பட்டு வந்தது. ஆனால் இதுகுறித்து தற்போது வரை எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாதது குறிப்பிடத்தக்கது. கடந்த முறைக்கு E-KYC செய்தது போல இந்த முறையும் அவசியமாகும். அதேபோல் நிலப் பதிவுகளை சரிபார்ப்பு செய்யப்பட வேண்டியது கட்டாயமானதாகும்.எ னவே e-KYC செய்ய விரும்புபவர்கள் அதிகாரபூர்வ இணைய தளத்தில் சென்று செய்து முடிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.