இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்காகவும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காகவும் அரசு பலவிதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பாக மக்களுக்கு தேவையான அனைத்து விதமான சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதனைப் போலவே நாட்டின் குடிமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்திய பிரதமர் மோடி அவர்கள் இலவசமாக லேப்டாப் வழங்க உள்ளதாக ஒரு செய்தி இணையத்தில் உலா வந்து கொண்டிருக்கிறது.

பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் இதனை பெற விண்ணப்பிக்கலாம் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக உருவாக்கப்பட்ட இணையதள முகவரி ஒன்றும் பகிரப்பட்டு வரும் நிலையில் இந்த செய்தி தொடர்பாக ஆராய்ந்த பத்திரிக்கை தகவல் மையம் இந்த செய்தி முற்றிலும் போலியானது என தெரிவித்துள்ளது. பிரதம நரேந்திர மோடி இலவச லேப்டாப் திட்டம் என்ற எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசை இதுவரை அறிவிக்கவில்லை என்றும் இதனை மக்கள் யாரும் நம்பி ஏமாற வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.