மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. அந்தவகையில் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6,000 3 தவணையாக வழங்கப்படுகிறது. இந்த பணம் நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. . இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலும், 2வது தவணை ஆகஸ்டு 1 முதல் நவம்பர் 30 வரையிலும், மூன்றாவது தவணை டிசம்பர் 1 முதல் மார்ச் 31 வரை வழங்கப்படுகிறது.

தற்போது வரை பனிரெண்டாவது தவணை பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை பணம் வங்கி கணக்கில் வர இருக்கிறது. ஆனால் 13வது தவணைக்கான பணம் கிடைக்குமா? இல்லையா? என்பதை சரிபார்க்க வேண்டும். PM கிஷான் யோஜனாவின் 13 வது தவணைக்கான பயனாளிகள் உடைய பட்டியலில் உங்களுடைய பெயர் உள்ளதா? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு முதலில் பிஎம் கிசான் யோஜனா அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு https://pmkisan.gov.in செல்ல வேண்டும்.

முகப்பு பக்கத்தில் உள்ள ஃபார்மர்ஸ் கார்னர் விருப்பத்திற்கு சென்று பயனாளிகளின் பட்டியல் விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும். அதன் பிறகு தோன்றும் மாநிலம், மாவட்டம், துணை மாவட்டம், தொகுதி மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்ததாக அறிக்கையை பெறுவது என்பதை தேர்ந்தெடுக்கவும். அனைத்து பயனாளிகளின் பட்டியலும் உங்கள் பெயரோடு மேலே தோன்றும். அதில் பெயர் உள்ளதா என்பதை சரி பார்க்கலாம்.