குஜராத் மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்தியன் ரயில்வே “பாரத் கவுரவ் டீலக்ஸ் ஏசி சுற்றுலா ரயிலை” அறிமுகப்படுத்த இருக்கிறது. “ஏக் பாரத் ஷ்ரேஸ்தா பாரத்” எனும் திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த சுற்றுலா ரயில் தன் முதல் சுற்றுப் பயணத்தை வரும் பிப்ரவரி 28 ஆம் தேதியன்று டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து துவங்குகிறது. முதல் மற்றும் 2ஆம் வகுப்பு ஏசியுடன் 8 நாள் சுற்றுப் பயணத்தை இந்த அதி நவீன பாரத் கவுரவ் டீலக்ஸ் ஏசி சுற்றுலா ரயில் மேற்கொள்ள இருக்கிறது.

இந்த ரயிலில் 4 முதல் வகுப்பு ஏசி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள், 1 பேண்ட்ரி மற்றும் 2 ரயில் உணவகங்கள் இருக்கிறது. ஒரே சமயத்தில் குறைந்தது 156 பேர் பயணிக்கும் வகையில் இந்த ரயில் அமைந்துள்ளது. குஜராத்தின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக இந்த சுற்றுலா ரயில், அம்மாநிலத்தின் முக்கிய புனித யாத்திரைகள் மற்றும் பாரம்பரிய தளங்களுக்கு பயணிக்க இருக்கிறது.