திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் என்றாலே முதலில் ஞாபகத்துக்கு வருவது லட்டு பிரசாதம் தான். திருப்பதியில் மொட்டை அடித்து விட்டு லட்டு வாங்கி வந்து பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவருக்கும் பகிர்ந்து கொடுப்பது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். அதிலும் லட்டு தயாரிக்க பயன்படுத்தும் பதார்த்தங்களால் அதனுடைய சுவை இன்னும் அதிகமாக காணப்படும். வேறு எங்கும் இது போன்று தயாரிப்பது மிக கடினம். இதனால் இதனுடைய மவுசு அதிகம்.

2022-23ம் நிதி ஆண்டில் லட்டு விற்பனை மூலமாக 325 கோடி வருவாய் ஈட்டப்பட்டது. திருப்பதி தேவஸ்தானத்தின் கிளை கோயில்கள் பல்வேறு மாநிலங்களில் இருக்கிறது. அவை அனைத்திற்கும் திருமலையில் லட்டு தயாரிக்கப்பட்டு அங்கிருந்துதான் விநியோகம் செய்யப்படுகிறது. வேறு எங்கும் தயாரிப்பதற்கு அனுமதி அளிப்பதில்லை. இதனால் வரை லட்டு தயாரிப்பதற்கு ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் உயர்தர இயந்திரங்கள் மூலமாக லட்டு தயாரிக்க தேவஸ்தான முடிவு செய்துள்ளது. அதற்காக 50 கோடி ரூபாய் மதிப்பில் ஜெர்மனி, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளன.