திமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக ஆட்சியில் இதே மாதிரி நீட் விலக்கு சட்ட மசோதா அனுப்பி வச்சாங்க.  அது எங்க போச்சுன்னு தெரியல, ஒரு வருஷம். அதிமுககாரங்க பொய் சொல்லிட்டே இருந்தாங்க. முதல்ல வந்துரும்,  நாங்க விலக்கு கொடுத்துவிடுவோம் என்று… ஆனால் நம்முடைய தலைவர் அவர்கள் திருப்பி வைத்த உடனே அடுத்த நாளே அனைத்து கட்சி கூட்டம்…

எல்லாரையும் கூப்பிட்டு,  மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டு,  மீண்டும் அனுப்பப்பட்டது. அதையும் டெல்லி அனுப்பாமல் வச்சிருந்தார். தொடர்ந்து நம்முடைய அமைச்சர்களை எல்லாம் அனுப்பி,  வலியுறுத்தி இப்போ ஜனாதிபதி கிட்ட இருக்கு. ஆனால் எந்த பதிலும் இல்லை. இவர் இங்கு உட்கார்ந்து I Will Never Ever. சிலர் என்ன சொல்றாங்க…

ஒரு சிலர் மருத்துவ படிப்பு தானே…  மருத்துவ படிப்பு இல்லன்னா..  வேற படிப்பே இல்லையா ? அத சொல்றதுக்கு நீ யாரு ? என் வீட்டு குழந்தை மருத்துவர் ஆகணும்னு ஆசைப்படுதுன்னா…  அதுக்கு அந்த கல்வி உரிமை இருக்கு. நீட்டுனு ஒரு தேர்வு கொண்டு வந்து,  ஒரு தகுதியற்ற தேர்வு தான் இந்த நீட். இதை என்னைக்கு ஒழிக்கிறோமோ,  அன்னைக்கு தான் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ஒரு விடியல்.

அதை திராவிட முன்னேற்ற கழகம் கண்டிப்பாக களத்தில் இறங்கி செய்யும். இன்னைக்கு ஒரு நாளைக்கு இங்கே கூடி இருக்கிறோம். அஞ்சு மணி ஆச்சுன்னா…  எல்லாரும் ஜூஸ் குடிச்சிட்டு கிளம்பிடுவோம். இல்லை,  இதான் உண்மையாக  நடக்கும். ஆனால் இது ஆரம்பம். இது முடிவல்ல..  நீங்க பேசும்போது எல்லாரும் சொன்னாங்க… இது ஒவ்வொரு கல்லூரிக்குள்ளேயும் போகணும். ஒவ்வொரு கல்லூரிக்குள்ளேயும் மாணவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடனும்.

எங்க மாடு பிடிக்கிறதுக்கு சண்டை போட்டோம், ஒரு மாணவரோட உயிருக்கு சண்டை போட மாட்டோமா ? மாணவர்களிடம் நான் சொல்றது…  தயவு செய்து சொல்லுறது.. இன்னும் கொஞ்சம் பொறுமையா இருங்க. நம்முடைய தலைவர் அவர்கள் கண்டிப்பாக இந்த நீட் தேர்வில் இருந்து விலக்கு வாங்கி தருவார்கள். தலைவர் அவர்கள் அந்த வாக்குறுதியை கொடுத்திருக்கிறார்கள் என தெரிவித்தார்.