செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், இதுவரைக்கும் இந்தியாவில் காண முடியாத ஒரு சர்வாதிகார ஆட்சியை இன்னைக்கு நம்ம பாத்துட்டு இருக்கோம். அண்மையில் ஏழு லட்சம் கோடி ரூபாய் சிஏஜி ரிப்போர்ட் கொடுத்திருக்கக் கூடிய விபரம் எல்லாம் உங்களுக்கு நல்லா தெரியும். அது பற்றி இன்றைக்கு பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்கள் வாய் திறந்து பதில் சொல்ல முன் வரல.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மதிப்பில்ல. தேர்தல் கமிஷனுக்கும் சுதந்திரம் கிடையாது,  ஈடி – சிபிஐ – ஐடி என அரசியல் எதிரிகள் எல்லாம் அச்சுறுத்துகிற..  ஒரு ஏவல் அமைப்புகளாக இந்த அமைப்புகளை பிஜேபி ஆட்சி பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. நாங்கள் எல்லாம் இன்னைக்கு தனி தனி கட்சிகள் இருந்தாலும்,  நாட்டை காப்பாற்றுவதற்கு ஒன்னா சேர்ந்து இருக்கிறோம்.

அரசியல் லாபங்களுக்காக நாங்கள் சேர்ந்து இருக்கிறோம் என்று யாரும் தயவு செய்து நினைக்காதீங்க. இந்தியாவினுடைய மான்மையை காப்பாற்றுவதற்காக…. இந்தியாவினுடைய மதசார்பின்மையை காப்பாற்றுவதற்காக…. இந்தியாவினுடைய சமூக நீதியை காப்பாற்றுவதற்காக…..  நாங்கள் எல்லாம் இன்றைக்கு ஒன்று சேர்ந்திருக்கிறோம். ஒரு பெரிய போர்க்களத்தில் ஈடுபட போகிறோம். அப்படி ஈடுபடக் கூடிய அந்த போர்க்களத்திற்கு நீங்கள் எல்லாம் எங்களுக்கு பக்கபலமாக இருக்கணும்,  துணை நிற்க வேண்டும் என்று என தெரிவித்தார்.