செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்னைக்கு கர்நாடக அரசு கேட்டா  எங்களுக்கு குடிப்பதற்கே தண்ணீர் இல்லைன்னு சொல்றாங்க.   பொறுப்புல இருக்கின்ற முதலமைச்சர் இதையெல்லாம் உணர்ந்து….  விவசாயிகளுக்கு உரிய நேரத்திலே எப்படி தண்ணி தொறந்தீங்களோ, அதேபோல விவசாயிகளுக்கு தேவையான நீரை வழங்குவதும் இந்த அரசினுடைய கடமை..  அதை சரியான முறையிலே செயல்படுத்தினால் தான்  இந்த குருவை சாகுபடியில் நல்ல முறையில் விளைச்சல் கிடைக்கும்.

இதை நீங்க கேட்கவே மாட்டேங்குறீங்க…  ஸ்டாலினை பார்த்தா பயப்படுறீங்களே,  நடுங்கறீங்களே..  ஒரு கேள்வி கூட கேட்க மாற்றிங்க. நான் ஊடகத்துல பாத்துட்டு தான் இருக்கிறேன். எங்கிட்ட கேக்குற கேள்வில பத்துல ஒரு கேள்வி கூட அவர்கிட்ட கேக்க மாட்டேங்குறீங்க…

தயவுசெய்து ஊடக நண்பர்களும்,  பத்திரிக்கை நண்பர்களும் மக்களுடைய நன்மை கருதி இந்த ஆட்சியில் ஏற்படுகின்ற அவலங்கள், துயரங்கள், துன்பங்கள், வேதனைகள் ,  மக்கள் படுகின்ற கஷ்டங்களை இந்த ஊடகத்தின் மூலமாக முதலமைச்சர் கிட்ட கேள்வி கேட்டு,  அதன் மூலமாக பதிலை பெற்று அதன் வாயிலாவது இந்த அரசாங்கம் மக்களுக்கு நன்மை போய் சேரட்டும். அந்த பணியை நீங்க செய்யுங்க.

விலைவாசி பற்றி ஒன்னு மட்டும் தான் கேக்குறீங்க. தக்காளி மட்டும் தான் கேக்குறீங்க. தக்காளி 160-க்கு போயிட்டு  ஒரு கிலோ… சிறு வெங்காயம் 150 ரூபாய்க்கு போயிட்டுது… பூண்டு 80 ரூபாயிலிருந்து 150…  துவரம் பருப்பு 110-ல இருந்து 150…

இது மட்டுமல்ல எல்லா பொருளும்….  மளிகை சாமான் கடையில் இருக்குற அத்தனை பொருளுமே….  ஏழை எளிய மக்கள் அன்றாட வாழ்க்கைக்கு வாங்கி பயன்படுத்தக்கூடிய இந்த உணவு பொருட்களை அத்தனையுமே கிட்டத்தட்ட 70% உயர்ந்திருக்குது, இதைப் பற்றி எல்லாம் அவருக்கு கவலை இல்லை என தெரிவித்தார்.