
இந்தியாவில் இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் பண பரிமாற்றத்திற்காக வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியமே கிடையாது. அனைவரது கையிலும் ஸ்மார்ட் போன் இருப்பதால் அதிலுள்ள பண பரிமாற்ற செயலிகள் மூலமாக இருந்த இடத்தில் இருந்து கொண்டே மற்றவருக்கு எளிதாக பணத்தை மாற்றலாம். தற்போது பல பணம் பரிமாற்ற செயலிகள் மக்களுக்கு உதவும் விதமாக நடைமுறையில் உள்ளன.
அதிலும் குறிப்பாக போன் பே, கூகுள் பே மற்றும் பேடிஎம் போன்றவைகளை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்த செயலிகள் மூலமாக க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்து யுபிஐ என்னை உள்ளிட்டு உடனடியாக பணத்தை மாற்றி விடலாம். ஆனால் சில சமயங்களில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பணத்தை சரியாக அனுப்ப முடியாத நிலை ஏற்படும். இல்லையென்றால் தவறுதலாக பணம் வேறு நபர்களுக்கு சென்று விடும். இப்படி நடந்தால் கவலைப்பட வேண்டாம்.
முதலில் நீங்கள் பணத்தை அனுப்பிய யூபிஐ செயலியில் உள்ள வாடிக்கையாளர் சேவை இடம் புகார் செய்ய வேண்டும். அங்கு உதவி கிடைக்கவில்லை என்றால் NPCI போர்ட்டலில் உள்ள WHAT WE DO ஆப்ஷன் அல்லது வங்கியில் நீங்கள் புகார் அளிக்கலாம். இல்லையென்றால் bankingombudsman.rbi.org.in என்ற இணையதளத்தில் புகார் செய்யலாம்.