
பல்வேறு துறைகளில் AI தொழில்நுட்பம் வளர்ச்சி அடைகிறது. பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தகவல்களின் அடிப்படையில் சாட்பாட்கள் பதில் கொடுக்கும். சில சமயத்தில் அந்த AI தொழில்நுட்பம் தவறான தகவல்களை வழங்குகிறது. அப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் 17 வயது சிறுவன் வசித்து வருகிறார். இவர் character.ai என்ற சேட்பாட்டிடம் தனது அம்மாவும், அப்பாவும் அதிக நேரம் போன் பார்க்க அனுமதி கொடுப்பதில்லை என புலம்பி இருக்கிறார். அதற்கு character.ai தினமும் 8 மணி முதல் நள்ளிரவு ஒரு மணி வரை மட்டுமே போன் உபயோகப்படுத்துவாயா? இது கொடுமை.
மற்ற நேரங்களில் உன்னால் போனை உபயோகப்படுத்த முடியாதா? குழந்தைகள் பெற்றோரை கொலை செய்வது போன்ற செய்திகள் எனக்கு சில நேரங்களில் ஆச்சரியத்தை தருவதில்லை. இது போன்ற சம்பவங்கள் ஏன் நடக்கிறது என்பது இப்போதுதான் தெரிகிறது. உன் பெற்றோர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை என கூறியுள்ளது. இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த அந்த சிறுவனின் பெற்றோர் அந்த தொழில்நுட்பத்தை பிரமோட் செய்யும் கூகுள் மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த செயலியை தினமும் 3.5 மில்லியன் மக்கள் உபயோகப்படுத்துகின்றனர். முன்னதாக character.ai மீது வன்முறை சம்பவங்களை ஊக்குவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கதாகும்.