
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2024 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தார். இந்த திட்டம் புதிய தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தின் சலுகைகளை பெறுவதற்கு வங்கி கணக்குகளை ஆதாருடன் இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அதாவது வேலை வாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ஊழியர்கள் தங்களுக்கான சலுகைகளை பெறுவதற்கு ஊழியர்களின் வங்கி கணக்கு ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என அரசு தெரிவித்தது.
இந்நிலையில் EPFO UAN செயல்படுத்துதல் மற்றும் வங்கி கணக்குகளை ஆதாருடன் இணைப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து மத்திய தொழிலாளர் அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இதற்கான கால அவகாசம் கடந்த பிப்ரவரி 15ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தற்போது 2025 ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் UAN- ஐ செயல்படுத்தப்பட்டதும் நீங்கள் பிஎப் கணக்கு மேலாண்மை, பிஎஃப் பாஸ்புக் பதிவிறக்கம், ஆன்லைன் கோரிக்கை மற்றும் pf பரிமாற்றம் போன்ற பல சேவைகளை இடையூறு இல்லாமல் அணுக முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.