PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு UAN எண் என்பது முக்கியமான ஒன்று. இந்த எண்ணை பயன்படுத்தி தான் சந்தாதரர்கள் தங்களுடைய பிஎஃப் கணக்கு சரிபார்க்க முடியும். ஊழியரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட பி எப் கணக்கு இருந்தால் UAN ஐ பயன்படுத்தி கணக்கு குறித்த விபரங்களை ஒரே இடத்தில் பார்த்துக் கொள்ளலாம். இதற்கு பயனர்கள் epfindia.gov.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு நுழைய வேண்டும். அதில் சேவை என்ற விருப்பத்தை கிளிக் செய்து யுஏஎன் அல்லது ஆன்லைன் சேவைக்கு செல்ல வேண்டும் அதனைத் தொடர்ந்து ஸ்கிரீனில் தெரியும் என்றதை கிளிக் செய்து உறுப்பினர் ஐடி, ஆதார் அல்லது பான் ஏதாவது ஒன்றை உள்ளிட வேண்டும்.

பின்பு பிறந்த தேதி, பெயர், செல்போன் எண் போன்ற விவரங்களை பதிவிட வேண்டும். அதன் பிறகு கேப்சா குறியீட்டை டைப் செய்து Get Authorization Pin என்பதை கிளிக் செய்ய வேண்டும். இவை அனைத்தையும் சரி பார்த்த பிறகு யுஏஎன் ஆர்டர் வழங்கப்படும். ஊழியர்களுடைய 55 வயது பூர்த்தியாகும் போது பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளலாம். அதற்கு முன்பாக வீடு வாங்குதல், கட்டுமானம், பிள்ளைகளின் திருமணம் கல்வி போன்ற காரணங்களுக்காகவும் பணத்தை பெற்றுக்கொள்ள முடியும். தங்களுடைய பிஎஃப் பணத்தை பெறுவதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம்.