
மின்சார வாகன பேட்டரி உற்பத்தியை மேம்படுத்த ரூ.18,100 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இருசக்கர வாகனங்களுக்குரிய ஊக்கத்தொகை 11 ஜூன் 2021 முதல் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மின்சார வாகனங்களுக்கான சரக்கு மற்றும் சேவைவரி 12 சதவீதத்தில் இருந்து 5% ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது.
மின்சார வாகனங்களுக்கு சாலை வரியில் இருந்து விலக்கு அளிக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிவுறுத்தி இருக்கிறது. மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கு இதேபோன்று மேலும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து உள்ளது. இத்தகவலை மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கனரக தொழில்துறை இணை அமைச்சர் கிருஷண் பால் குர்ஜார் தெரிவித்து உள்ளார்.