51 அரிய வகை நோய்களுக்கான சிகிச்சைக்காக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து முழு விலக்கை மத்திய அரசு அளித்துள்ளது. நிதி அமைச்சகம் வெளியிட்ட குறிப்பில், இந்த சலுகையை பெறுவதற்கு சுகாதார சேவை இயக்குநரகத்திடம் சான்றிதழ் பெறவேண்டும்.

மருந்துகளுக்கு 10% சுங்கவரியும், உயிர்காக்கும் மருந்துகள்/தடுப்பூசிகளுக்கு 5 சதவீதம் (அல்லது) வரி விலக்கும் அளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் பெம்ப்ரோலிசுமாப் ஆகிய மருந்துகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்ய முழுமையாக வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.