அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணம் ஷில்லிங்டனைச் (Shillington, Pennsylvania) சேர்ந்த 53 வயது மதிக்கத்தக்க ஒரு நபர், துப்பாக்கியைத் (Shotgun) தவறுதலாக வெடிக்கச் செய்ததால், முதுகில் குண்டடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நள்ளிரவு நேரத்தில் அவர் துப்பாக்கியைச் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, அவரது செல்ல நாய் திடீரெனக் கட்டிலில் ஏறி துப்பாக்கி மீது குதித்துள்ளது.

நாய் துப்பாக்கி மீது குதித்தபோது, அதன் கால் ட்ரிகரில் (Trigger) தவறுதலாகப் பட்டிருக்கலாம் அல்லது துப்பாக்கியில் வேறு ஏதேனும் கோளாறு இருந்திருக்கலாம் என்று ஷில்லிங்டன் போலீசார் தெரிவித்துள்ளனர்.

குண்டடிபட்ட அந்த நபர், தன் மகனுக்குத் தகவல் கொடுத்ததையடுத்து, அவர் மீட்கப்பட்டு ரீடிங் மருத்துவமனைக்கு (Reading Hospital)க் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது விபத்து என்று தோன்றினாலும், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோன்று, கடந்த காலங்களில் அமெரிக்காவில் செல்லப் பிராணிகளால் துப்பாக்கிகள் தவறுதலாக இயக்கப்பட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.