வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பேருந்து நிறுத்தம் பகுதியில் நெடுஞ்சாலை ஓரமாக இருக்கும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் இயந்திரத்துடன் அங்கு சென்றனர். இதுகுறித்து அறிந்த அந்த பகுதி மக்கள் ஒன்று திரண்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் ஆக்கிரமிப்பு இடத்தில் அமர்ந்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதற்கிடையே ஆக்கிரமிப்பு செய்துள்ள கடைக்காரர்கள் தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றி விடுகிறோம் என கூறி இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டனர். அவர்கள் கேட்டபடி கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.