திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் கன மழை பெய்து மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்து சாலைகள் துண்டிக்கப்பட்டது. தற்போது மழை ஓய்ந்ததால் நிவாரண பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நெல்லை ரயில் நிலையத்தில் சூழ்ந்து இருந்த வெள்ள நீர் வடிந்தது. இதனால் இன்று ரயில் சேவை மீண்டும் தொடங்கியது. அதன்படி நெல்லை- செங்கோட்டை இடையே பயணிகள் ரயில் சேவை, செங்கோட்டை-தாம்பரம் இடையே இயங்கும் பாலருவி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் வழக்கம் போல செயல்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.