தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 4 நாட்கள் விடுமுறை இருப்பதால் பலரும் சொந்த ஊருக்கு செல்கிறார்கள். இதன் காரணமாக பயணிகள் சிரமமின்றி பேருந்தில் செல்ல வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பேருந்துகளில் முன்பதிவும் முடிந்துவிட்டது. இருப்பினும் பயணிகள் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜனவரி 12 முதல் 14-ஆம் தேதி வரையும், மீண்டும் 17-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரையும் சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கு சேலம் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.