சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடுமையான குளிர் நிலவு வருகிறது. அதேபோல் ஒரு சில பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக லேசான மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியதாவது, சென்னையில் 15-ம் தேதி வரை இரவில்  குளிர் நீடிக்கும் என தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்பதனால் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதனையடுத்து  அதிக பட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் 24, 25 டிகிரி செல்சியஸ் வரை இருக்கலாம் என கூறியுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கிழக்கு திசை வேகம் மாறுபாடு காரணமாக இன்று மற்றும் நாளை தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பணி மூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.