மத்திய அரசு தற்போது NPS வாத்சல்யா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குழந்தைகளுக்கான ஒரு ஓய்வூதிய திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் ஒரு வருடத்திற்கு குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.

அதே சமயம் அதிகபட்ச வரம்பு கிடையாது என்பதால் குழந்தைகளின் பெயரில் எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம். இது ஒரு பென்ஷன் திட்டம் என்பதால் குழந்தைகளின் எதிர்காலத்தை கருதி முதலீடு செய்யலாம். இது குழந்தைகளின் ஓய்வு காலத்திற்கு உதவும். மேலும் அதே சமயத்தில் இந்த திட்டம் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணம் போன்றவற்றிற்கு உதவாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.