
ஐபிஎல் 18 வது சீசனில் ஐந்தாவது போட்டியானது குஜராத்தில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் குஜராத் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சு தேர்வு செய்தார். அதன்படி, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. இதன் தொடக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா 27 பந்தில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 243 ரன்களைக் எடுத்தது. களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணியில் பிரியான்ஸ் ஆர்யா 47 ஓட்டங்களிலும், அஸ்மத்துல்லா 16 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தார்கள். பின்பு களமிறங்கிய மேக்ஸ்வெல் டக் அவுட்(19) ஆனார். ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபுறம் அதிரடி காட்டிய ஸ்ரேயாஸ் ஐயர் 42 பந்துகளில் 97 ஓட்டங்கள் குவித்தார்.
19ஆவது ஓவர் முடிவில் 97 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கடைசி ஓவரில் தொடர்ந்து அதிரடியாக விளையாடுங்கள் என்றே ஸ்ரேயாஸ் ஐயர் ஷாசாங்கிடம் கூறியுள்ளார். இதனை பயன்படுத்திய ஷசாங் கடைசி ஓவரில் 23 ஓட்டங்கள் சேர்த்தார். இது போட்டியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கடைசியில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 232 ரன்கள் எடுத்தது. இதன் மூலமாக பஞ்சாப் 11 ரன் வித்தியாசத்தில் குஜராத் அணியை வென்றது.
இந்த நிலையில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டம் இழக்காமல் 97 ரன்களில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர் சதம் அடிக்க வாய்ப்பு இருந்தும் அதனை தியாகம் செய்திருப்பது இப்போது தெரிய வந்திருக்கிறது. கடைசி ஓவரின் விளையாடிய போது “என்னுடைய சதத்தை பார்க்காதே நீ விளையாடு” என்று ஷஷான்சிங் தன்னிடம் முதலில் கூறியதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து தன்னுடைய முதல் சதத்தை தியாகம் செய்த இவரை ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.