தனியார் பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்துவதற்குரிய விதிமுறைகளை அரசு வகுத்து செயல்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். மாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் அடிப்படையில் பயிற்சி மையங்கள் செயல்படக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நீட் பயிற்சி மையத்தில் ஒரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அண்மை காலமாக மாணவர்கள் தற்கொலை செய்வது தொடர் கதையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மாணவ-மாணவியரின் தற்கொலைக்கு நிரந்தர தீர்வுகாணும் நோக்கில் விரைவாக செயல்பட்டு நீட் விலக்கு சட்டத்துக்கு நடப்பு ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு முன்னதாக தமிழ்நாடு அரசு ஒப்புதல் பெற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.