உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கூகுள் கொண்டுள்ளதுபயனர்களின் தனியுரிமையை பாதுகாக்கவும், வசதிகளை மேம்படுத்தவும் புதிய அப்டேட் ஒன்றை கொண்டு வர இருக்கிறது கூகுள். அதாவது, ஏற்கனவே கூகுளில் உள்ள “SafeSearch” முறையில் சில மாற்றங்கள் ஓரிரு மாதங்களில் வர இருக்கின்றன.

வன்முறை, ஆபாச படங்கள், ரத்தம் சம்மந்தமான புகைப்படங்களை பார்க்காமல் தவிர்க்கும் வகையில் செட்டிங்கை மாற்றிக்கொள்ளலாம். இதனை எனேபிள் செய்தால் குறிப்பிட்ட இந்த படங்கள் Blur ஆக தெரியும். இதற்கிடையில் கூகுள் தன் தேடுபொறியிலும் செயற்கை நுண்ணறிவை புகுத்த வேண்டும் என திட்டவட்டமாக முடிவெடுத்து அதற்கான பணிகளை தொடங்கி விட்டது.