உச்ச நட்சத்திரமான ஷாருக்கான் ஐந்து வருடங்களுக்குப் பிறகு நடித்துள்ள திரைப்படம் பதான். இத்திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நீண்ட இடைவேளைக்குப் பிறகு தீபிகா படுகோன் நடித்துள்ளார். ஹிந்தியில் வெளியான இத்திரைப்படம் தமிழிலும் டப்பிங் செய்து ரிலீஸ் ஆகி இருக்கின்றது. இந்த திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாக தீபிகா படுகோனின் காவி நிற நீச்சல் உடை சர்ச்சையை ஏற்படுத்தியது. இது படத்திற்கு விளம்பரமாக அமைந்தது.

இதனால் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. ஆனால் இத்திரைப்படம் ஒரு தேசபக்தி திரைப்படமாக கொடுத்து அனைவரையும் படக்குழு ஆச்சரியப்பட செய்துள்ளார்கள். தனது உயிரை நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் கொடுக்கும் ஒரு மாவீரனின் கதை தான் பதான் திரைப்படம். ஷாருக்கான் இந்திய அரசு சார்ந்த ஒரு குழுவின் முக்கிய வீரர் ஆவார். ராணுவ மோதல்களில் சிறு காயம் அடைந்தவர்களை ஒன்றாக இணைத்து தனி குழுவாக செயல்படுகின்றார்.

இந்திய அரசே விஞ்ஞானி ஒருவரை ஜான் ஆபிரகாம் தலைவரான ஒரு குழு கடத்துகின்றது. இந்திய பிரிவில் உளவாளியாக வேலை பார்த்தவர் ஜான் ஆபிரகாம். இவர் தற்போது நாட்டுக்கு எதிராக வேலை செய்யும் குற்றவாளியாக மாறுகின்றார். ரத்த வித்து என்ற ஆபரேஷனை செய்யப்போவதாக செய்தி கிடைக்கின்றது. மேலும் சின்னம்மை நோயை மீண்டும் இந்தியாவில் பரப்ப அவர் திட்டம் தீட்டுகின்றார். இதற்கு பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவரும் அவருக்கு துணையாக உள்ளார். ஜான் ஆபிரகாமின் சதி திட்டத்தை சாருக் கான் எப்படி தடுக்கின்றார் என்பதே மீதி கதையாகும்.

ஷாருக்கான் ஆக்சன் காட்சிகளில் அசத்துகின்றார். ஒவ்வொரு சண்டை காட்சிகளும் சூப்பர் மேன் செய்வது போல அவரின் சண்டை காட்சிகள் இருக்கின்றது. ஆக்சன் மட்டுமல்லாமல் காதல், சோகம் உள்ளிட்டவற்றிலும் ஷாருக்கான் அசத்தி உள்ளார். அவருக்கு இணையாக வில்லனும் அசத்தியிருக்கின்றார். அவர் முன்னாள் ராணுவ அதிகாரியாக இருந்து கடற்கொள்ளையர்களிடம் சிக்கி தனது கர்ப்பிணி மனைவியை இழக்கின்றான். இதனால் ஆக்திரமடைந்து தனது நாட்டிற்கு எதிராக செயல்பட ஆரம்பிக்கின்றார்.

பதான் திரைப்படத்தில் கிளாமருக்கு பஞ்சம் இல்லாமல் தீபிகா படுகோன் நடித்திருக்கின்றார். மேலும் ஆக்சனிலும் கலக்கியுள்ளார். படத்தில் ஷாருக்கான் உடன் சிறப்பு தோற்றமாக சல்மான் கான் சண்டை காட்சிகள் வருகின்றார். கிளைமாக்ஸ் இல் இருவரும் தங்களது போட்டியாளர்களை பற்றி வதந்தி பேசி தங்களை சுய பெருமைப்படுத்துகின்றார்கள். படத்தில் ஆக்சன் காட்சிகளை எக்கச்சக்கமாக கொடுத்திருக்கின்றார்கள். படத்தில் பாடல்கள் அதிகம் கிடையாது.

படத்தில் இடம் பெற்ற பாடலில் தீபிகாவின் காவி நிற நீச்சல் உடை சர்ச்சை ஏற்படுத்திய நிலையில் படத்தில் நீக்காமல் அப்படியே இருக்கின்றது. சென்சார் அதை எப்படி விட்டது என தெரியவில்லை. முதல் பாதி திரைப்படம் கொஞ்சம் மெதுவாக செல்கின்றது. இடைவேளைக்குப் பிறகுதான் படம் விறுவிறுப்பாக நகர்கிறது. நான்கு வருடங்களுக்கு பிறகு ஷாருக்கான் நடிப்பில் ஹிந்தி திரைப்படம் வெளியாகி அதிரடி ஆக்சன் திரைப்படம் ஆக ரசிகர்களை கவறும் வகையில் அமைந்திருக்கின்றது குறிப்பிடத்தக்கது.