இந்திய வருமான வரித்துறையால் தனிநபர் நடத்தும் நிறுவனங்கள், இணைந்து நடத்தும் நிறுவனங்கள் என அனைத்திற்கும் வரி செலுத்துவதற்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படுவது பான் கார்டு ஆகும். இது 10 எண்கள் கொண்ட அடையாளம் காட்டும் நிரந்தர கணக்கு எண் (PAN) ஆகும்.வங்கி கணக்கு, பங்கு வர்த்தக கணக்கு, வீட்டுக் கடன் கணக்கு, மோட்டர் வாகனம் வாங்க கடன், சொத்துக்கள் வாங்க என அனைத்து வகையான பயன் பாட்டிற்கும் இந்த பான் கார்டு அவசியமாக உள்ளது. இந்த பான் கார்டு பற்றிய தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகி வருகிறது.

அதாவது பான் கார்டுகளில் தந்தையின் பெயர் முழுமையாக இருக்க வேண்டும். இன்சியல் மட்டும் இருந்தால் அந்த பான் கார்டு ஏற்றுக்கொள்ளப்படாது போன்ற தவறான தகவல்கள் பரவி வருகிறது. இதனால் உடனடியாக பான் கார்டுகளில் பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என பரவி வரும் தகவல்கள் உண்மையானதல்ல. ஆதார் கார்டுடன் பான் கார்டு இணையும்போதுதான் இனிஷியலோடு இருப்பது பிரச்சினையை உருவாக்கும். பான் கார்டுகளை வழங்கும் வருமான வரி துறையில் அதிகாரமான இணையதளத்தில் இனிஷியலோடு இருக்கும் பேன் கார்டுகள் ஏற்றுக்கொள்ளப்படாது. உடனே பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்ற எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.