
அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாகாணத்தில் சிகாகோ நகர் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஜோசப் (73) என்ற முதியவர் வசித்து வருகிறார். இவருடைய வீட்டின் அருகே பாலஸ்தீனத்தை சேர்ந்த அல்பயோமி என்ற சிறுவன் தனது குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தான். அவன் சம்பவ நாளில் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த போது ஜோசப் இனவெறியின் காரணமாக சிறுவனை தாக்கினார். அவர் அந்த சிறுவனை 26 முறை கத்தியால் கொடூரமாக குத்தியதில், வலியில் அலறி துடித்தான்.
சிறுவனின் சத்தத்தை கேட்டு ஓடி வந்த தாயையும் ஜோசப் கத்தியால் குத்தினார். இந்த தாக்குதலில் சிறுவன் உயிரிழந்து விட்டார். இந்த சம்பவம் கடந்த 2023 ஆம் ஆண்டு நடந்த நிலையில் ஜோசப்பை கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்திருந்தனர். மேலும் இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் ஜோசப்பை குற்றவாளி என அறிவித்து அவருக்கு 53 வருடங்கள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.