சுமார் 1.36 லட்சம் ஊழியர்கள் பயன்பெறும் அடிப்படையில் இமாச்சலப்பிரதேச மாநிலம் ஓய்வூதியம் வழங்குவதற்கான விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் எஸ்ஓபியை உரிய நேரத்தில் நிதித் துறை வெளியிடும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இமாச்சலப்பிரதேசத்தின் அனைத்து அரசு ஊழியர்களும் தற்போது புது ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வருவார்கள். அதோடு அவர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தின் பலன்களை பெறுவார்கள் என அரசு தெரிவித்து உள்ளது.

இமாச்சலபிரதேச மாநில தலைமைச்செயலர் பிரபோத் சக்சேனாவின் அலுவலகம் வெளியிட்ட குறிப்பில், இம்முடிவை செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறையை (SOP) அறிவிக்குமாறு நிதித்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசின் இம்முடிவால் சுமார் 1.36 லட்சம் ஊழியர்கள் பயம் பெறுவார்கள். அதற்குரிய விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் எஸ்ஓபியை உரிய நேரத்தில் நிதித்துறை வெளியிடும் என கூறப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதிகளில் பழைய ஓய்வூதியம் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.