செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான், போர்குணமற்ற உயிரினங்கள் உலகில் பரிதாபகரமானவை என சொல்கிறான். போராட்டமே வாழ்வின் இருத்தலை உறுதி செய்கிறது என்கிறான்…  போராடும் போது தான் மனிதனே பிறக்கிறான் என்கின்றான்… எந்த கோட்பாட்டை நான் எடுத்துட்டு வாழ்வது என சொல்லுங்க…

அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் உச்சத்திற் கொண்டாரடி-கிளியே ஊமைச் சனங்களடீ என்று சொல்லுகிறார் பாரதி. என்னதான் செய்வது நாங்கள் ? எங்களின் வாழ்விடத்தை பறிப்பீர்கள்….விலை நிலங்களை பறிப்பீர்கள்….. எல்லாம் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.  எஜமானர்கள் நீங்க, நாங்க  கைகட்டி கேட்கணும்…

போராடினால் எங்கள் மேல் குண்டாஸ்..  மழை வெட்டுபவன்,  மணல் அள்ளி தின்பவன் அவர்களுக்கு எல்லாம் பெயர் என்ன ? நீங்கள் கள்ளச்சாராயம் விற்றவர்களுக்கே  காசு கொடுத்தவர்கள் தான…. கேட்டால் அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது… சிறையில் இருந்தால்,  குடும்பம் கஷ்டப்படும் என்று சொன்னீர்கள் என தெரிவித்தார்.