உலக கோப்பை வெல்லும் அணியாக கருதப்பட்ட பாகிஸ்தான அணி வேர்ல்ட் கப்பில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தோல்வியை சந்தித்தது. அந்த அணி விளையாடிய 9 போட்டிகளில் 4 வெற்றி பெற்று 5 போட்டிகளில் தோல்வி அடைந்தது 8 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தை பெற்றிருந்தது. ஆனால் பாகிஸ்தான் அணி லீக் சுற்றோடு வெளியேறியது.

இதையடுத்து  உலகக் கோப்பை தோல்விக்கு பொறுப்பேற்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் பாபர் ஆஸம் அனைத்து பார்மட் போட்டிகளில் இருந்தும் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். ஏற்கனவே தேர்வு குழு தலைவர்  இன்சமாம் உல்கஹ்,  பவுலிங் பயிற்சியாளர் மோர்னி மோர்கல் தங்களது பொறுப்பை ராஜினாமா செய்த நிலையில், பாபரசமும் கேப்டன் பதவியை  ராஜினாமா செய்துள்ளார்.

இதை தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் டி20 போட்டிகளுக்கு சஹீன் ஷா அப்ரிடியும், டெஸ்ட் போட்டிகளுக்கு ஷான் மசூத்-ம் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.