2023 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

இந்தியாவின் தொடக்கட்டக்காரர் ஆன சுமன் கில் மாற்று ரோஹித் சர்மா களமிறங்கினர். ரோஹித் சர்மா வழக்கமான அதிரடியை வெளிப்படுத்த ரோகித் சர்மா 29 பந்துகளில் 47 ரன் குவித்து வலுவான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார். பிறகு கிங் கோலி சுமன் கில்  ஜோடி சேர சிறப்பாக ஆடிய சுமன் கில் அதிக வெப்பம் காரணமாகவும்,உடல் உஷ்ணத்தால் வெளியேற  ஷ்ரேயாஸ் ஐயர் களமிறங்கி கோலி உடன் ஜோடி சேர்ந்து இருவரும் அதிரடி காட்டினார். இருவரும் 3ஆவது விக்கெட்டுக்கு 163 (128) எடுத்தனர்.

கோலி 117 ( 113 ),  ஷ்ரேயாஸ் ஐயர் 105  (70), கே.எஸ் ராகுல் 39(20), சுமன் கில் 88(66) எடுக்க இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன் எடுத்து நியூஸிலாந்துக்கு மிகப்பெரிய டார்கெட்டை நிர்ணயம் செய்தது. அடுத்து இறங்கிய நியூஸிலாந்து அணியின்  கேப்டன் வில்லியம்சன் 69(73), மிட்செல் 134 (119), பில்லிப்ஸ் 41(33) எடுக்க அந்த அணி 48.5 ஓவர்களி அனைத்து விக்கெட்டையும் இழந்து  327 ரன் எடுத்து 70 ரன்  வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்திய அணி 2023ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு சென்றுள்ளது. நாளை தென்னாப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போட்டியில் யார் வெற்றி பெறுகின்றார்களோ அவர்களுடன் 19ஆம் தேதி இறுதி போட்டி விளையாடுவது குறிபிடத்தக்கது.