மலையாளத்தில் திரிஷ்யம் திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்தவர் ஆஷா சரத். அப்படத்தின் தமிழ் ரீமேக் பாபநாசம் எனும் பெயரில் வெளியானது. இதையடுத்து ஆஷா சரத் கமலின் தூங்காவனம், பின்னர் த்ரிஷ்யம்-2 போன்ற படங்களிலும் நடித்தார். தற்போது ஒருசில படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் ஆஷா சரத்.

இவருடைய மகள் உத்ரா வெளிநாட்டில் அக்கவுண்ட்ஸ் குறித்த படிப்பை பயின்றுள்ளார். அம்மாவை போன்று நடனத்திலும் சிறந்த பயிற்சி பெற்றிருக்கும் இவர் ஒரு படத்திலும் நடித்துள்ளார். மற்றொரு புறம் மாடலிங் துறையிலும் ஆர்வம்காட்டி வரும் உத்ரா கடந்த ஆண்டு நடந்த அழகிப்போட்டி ஒன்றில் பங்கேற்று ரன்னராக வெற்றி பெற்றுள்ளார்.

சென்ற ஆண்டு அக்டோபரில் உத்ராவுக்கும், ஆதித்யா என்பவருக்கும் திருமணமானது நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் உத்ராவின் திருமணம் நடந்து முடிந்தது. இந்நிகழ்வை திருமணத்துக்கு வராதவர்களும் பார்க்க வேண்டும் என்பதற்காக சோஷியல் மீடியா பக்கம் வாயிலாக லைவ்வாக திருமண காட்சிகள் ஒளிபரப்ப ஏற்பாடு செய்திருந்தார் ஆஷா சரத்.