
கவின் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் டைரக்டர் கணேஷ் கே பாபு இயக்கியிருந்த படம் “டாடா”. இப்படத்தில் பாக்யராஜ், ஐஷ்வர்யா, விடிவி கணேஷ், பிரதீப் ஆண்டனி உட்பட பலர் நடித்து இருந்தனர். இந்த படம் சென்ற பிப்ரவரி 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை பார்த்த திரையுலகினர் பலரும் படக்குழுவிற்கு தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் டாடாஅ படத்தின் புது அப்டேட் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இத்திரைப்படம் வருகிற மார்ச் 10ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்து உள்ளனர்.
explore the complexities of family, love and choices with this heartfelt story💙 #DadaOnPrime, Mar 10 pic.twitter.com/qEqqXSPruk
— prime video IN (@PrimeVideoIN) March 7, 2023