தமிழக முழுவதும் உள்ள நியாயவிலை கடைகள் மூலம் ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு அரிசி, பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மலிவான விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நியாயவிலைக் கடை ஊழியர்களுக்கு உத்தரவு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதாவது நியாய விலை கடைகளில் விற்பனையாகாத பொங்கல் மளிகை தொகுப்பில் உள்ள பொருட்களை தனித்தனியே அட்டைதாரர்களிடம் விற்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கான பணத்தை முன்கூட்டியே செலுத்துமாறு கூறியது ஊழியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மலிவான விலையில் விற்கப்பட்ட பொங்கல் தொகுப்பை வாங்க மக்கள் பலரும் ஆர்வம் காட்டாததால், தேங்கியுள்ள பொருட்களை தனித்தனியாக விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.