
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட ஓபிஎஸ் தோல்வி அடைந்தார். இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் அணியிலிருந்து விலகுவதாக ஜே சி டி பிரபாகர் மற்றும் புகழேந்தி உள்ளிட்டோர் அறிவித்துள்ளனர்.
மக்களவை தேர்தலில் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்டு ஓபிஎஸ் படுதோல்வி அடைந்த நிலையில் அவரது ஆதரவாளர்கள் கூட்டமாக விலகியுள்ளனர். அதன் பிறகு அவர்கள் கூட்டாக அளித்த பேட்டியில், ஓபிஎஸ்-க்கும் எங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, அனைவரும் ஒருங்கிணைந்த செயல்பட வேண்டும் என முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.