
மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் வருகிற நவம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலின் பிரச்சாரங்கள் தற்போது சூடு பிடித்து வருகின்றது. இந்தத் தேர்தலில் ஆளும் மகாயுதி மற்றும் மகா விகாஸ் அகாதி ஆகிய இரு அணிகளும் போட்டியிட உள்ளன. இந்த நிலையில் பா.ஜ.க கூட்டணியான சரத் பாவார் தற்போது தனக்கு எதிரணியான காங்கிரஸ் கூட்டணி அஜித் பாவார் மீது குற்றச்சாட்டு வைத்துள்ளார். தேசியவாத கடிகாரச் சின்னம் அஜித் பாவார் இடம் உள்ளது. தற்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு சமூக வலைதளங்களில் அஜித் பாவார் அணியினர் சரத் பாவார் புகைப்படங்களை பயன்படுத்தி மக்கள் மத்தியில் நற்பெயரை எடுக்க முயற்சிக்கின்றனர்.
இது குறித்து சரத் பாவார் அணியினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்த பொழுது சரத் பாவார் அணியின் முழு கருத்துகளையும் கேட்டு அறிந்த பின் நீதிபதி தீர்ப்பை வழங்கினார். இந்தத் தீர்ப்பில் கூறப்பட்டதாவது, சரத் பாவாரின் புகைப்படங்கள் பழைய வீடியோக்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும். அஜித் பாவார் தன்னுடைய சொந்த முயற்சிலேயே நிற்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.