தென்காசி மாவட்டம் மேலகரத்தில் தபால் நிலையம் ஒன்று உள்ளது. இந்த தபால் நிலையத்தின் முன்பிருந்த தபால் பெட்டியை நேற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் ஒருவர் தூக்கிச் சென்றுள்ளார். இதனை வழிப்போர்க்கள் தங்களது செல்போனில் விடியோவாக பதிவு செய்தனர். அதன்பின், அந்த நபரிடம் இருந்து தபால் பெட்டியை வாங்க முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை.

இதனால் அவர்கள் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். அதன்படி விரைந்து வந்த காவல்துறையினர், அவரிடம் இருந்து தபால் பெட்டியை வாங்கினர். அதன்பின் அந்த பெட்டியை தபால் நிலையத்தில் மீண்டும் வைத்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.