மகாராஷ்ட்டிராவில் ஜல்னா நகரத்தில் உள்ள சாந்தாஞ்ஹிரா சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 9 வயது சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதனை அறிந்த ஒருவர் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து, தூக்கிச் சென்றுள்ளார். அதன்பின் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு, சாலையில் வீசி சென்றுள்ளார்.

உயிருக்கு போராடிய நிலையில், கிடந்த சிறுமியை அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதற்கிடையில் சிறுமியின் நிலை அறிந்த உள்ளூர் வாசிகள் போராட்டம் நடத்தினர். அதன் பின்னர் குற்றவாளி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகப்படும் நால்வரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.